இலங்கை
கிளிநொச்சியில் மாணவர் தூதுவர் தேசிய நிகழ்ச்சி திட்ட கலந்துரையாடல்!

கிளிநொச்சியில் மாணவர் தூதுவர் தேசிய நிகழ்ச்சி திட்ட கலந்துரையாடல்!
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கல்வி அமைச்சுடன் இணைந்து மாணவர் தூதுவர் தேசிய நிகழ்ச்சி திட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றது.
சிரேஷ்ட மாணவ தலைவர்களின் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கிளிநொச்சி மாவட்ட மட்ட கலந்துரையாடல் நேற்று(23.07.2025) புதன்கிழமை காலை09.00 மணிக்கு நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன் விருத்தி பயிற்சி மண்டபத்தில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையின் ஆரம்ப நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இ.நளாஜினி மற்றும் உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் T.கோதை தலைமையில், நடைபெற்ற இப் பயிற்சிப் பட்டறையின் வளவாளராக யாழ். சங்கானை பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் R.ரவிராஜ் கலந்து கொண்டிருந்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட13 பாடசாலைகளின் சிரேஷ்ட மாணவ தலைவர்கள், மாணவ தலைவர்கள், பாடசாலை பொறுப்பாசிரியர்கள், இச்செய்றிட்டத்தில் தொண்டர்களாக பணியாற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ந்து இவர்கள் பாடசாலை மட்டத்தில் குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுத்துச் செல்வார்கள்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை