இலங்கை
குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து தாக்குதல்

குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபானசாலைக்கு அருகில் குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு இருவர் தப்பி சென்றுள்ளனர்.
தாவடி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு அருகில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தில் , சுதுமலை பகுதியை சேர்ந்த நேசராஜன் சர்வேந்திரன் (வயது 51) என்பவரே படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.