சினிமா
குழந்தை பெற்றப்பின் ஆளே மாறிய சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்!! புகைப்படங்கள்..

குழந்தை பெற்றப்பின் ஆளே மாறிய சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்!! புகைப்படங்கள்..
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான சுந்தரி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்.கடந்த ஆண்டு சுந்தரி சீரியல் முடிந்தபோது அவர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து அனைவருக்கும் அந்த செய்தியை அறிவித்து சொந்த ஊருக்கே சென்றார்.இடையில் தன் கணவருடன் விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் அவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார் கேப்ரியல்லா. கடந்த சில மாதங்களுக்கு முன் தங்களுக்கு மகள் பிறந்திருக்கிறார் என்ற தகவலை புகைப்படத்துடன் அறிவித்தார்.குழந்தை பெற்றப்பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் கேப்ரியல்லா, சிகப்புநிற சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.