இலங்கை
சம்பூரில் அகழ்வாய்வு தேவையா… அறிக்கை கோரியது நீதிமன்று!

சம்பூரில் அகழ்வாய்வு தேவையா… அறிக்கை கோரியது நீதிமன்று!
சம்பூரில் மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பில் அறிக்கை வழங்குமாறு மூதூர் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பூரில் கடந்த 19ஆம் திகதி மிதிவெடி அகற்றும் குழுவினர் பணியில் ஈடுபட்டபோது, மண்டையோடு உள்ளிட்ட மனிதச் சிதிலங்கள் சில மீட்கப்பட்டன. இந்த விடயம் மூதூர் நீதிவான் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், நீதிபதி திருமதி தஸ்னீம் பௌசான் நேற்று அங்கு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
இதன்போதே, மனித என்புச் சிதிலங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் தொடர்ச்சியான அகழ்வுப்பணிகளை மேற்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கை வழங்குமாறு அவர் உத்தரவிட்டார்.