இலங்கை
சுகாதார அதிகாரி மீது கொலை முயற்சி!

சுகாதார அதிகாரி மீது கொலை முயற்சி!
தெஹிவளை – கல்கிஸ்ஸ நகரசபையின் சுகாதார நிர்வாகி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
தெஹிவளை – எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.
குறித்த வேளையில், துப்பாக்கி சுடாததால் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
மேலும், துப்பாக்கிச் சூடு முயற்சிக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.
சந்தேக நபரை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு தாக்குதல்காரர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதாக தெரிவித்த தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.