சினிமா
சூர்யாவின் 45 வது ‘கருப்பு’ டீசர் வெளியீடு!தீபாவளி வெளியீட்டுக்காக தயாராகும் படக்குழு!

சூர்யாவின் 45 வது ‘கருப்பு’ டீசர் வெளியீடு!தீபாவளி வெளியீட்டுக்காக தயாராகும் படக்குழு!
‘ரெட்ரோ’ படத்துக்குப் பிறகு நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் புதிய திரைப்படமான “கருப்பு” யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் 45-வது திரைப்படமாகும் இப்படத்தை Dream Warrior Pictures நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளது.இப்படத்தில் சூர்யா ஒரு வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதோடு, அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் ஸ்வாசிகா, மலையாள நடிகர் இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி மற்றும் அனகா மாயா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். நேற்று வெளியான ‘கருப்பு’ டீசர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்நிலையில், படக்குழு இன்று ‘கருப்பு’ டீசரை ரசிகர்களுடன் நேரில் திரையரங்கில் பார்த்து அனுபவித்தனர். அப்போது, இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் ஆர்.ஜே. பாலாஜி, “படத்தை தீபாவளிக்கு வெளியிடும் முயற்சியில் இருக்கிறோம்” என்று கூறியதை உறுதிப்படுத்தினார்.