இலங்கை
தனியார் துறையினருக்கான மாத சம்பளம் அதிகரிப்பு!

தனியார் துறையினருக்கான மாத சம்பளம் அதிகரிப்பு!
தனியார் துறைக்கான குறைந்தபட்ச மாத சம்பளத்தை ஏப்ரல் முதலாம் திகதி முதல் அதிகரிக்க உத்தரவாதம் அளிக்கும் மூன்று மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது நேற்றைய தினம் (23) அமர்வின் போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொழிலாளர் அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், இதுவரை மாதத்துக்கு ரூபா 21,000 ஆக இருந்த குறைந்தபட்ச சம்பளம், புதிய சட்டப்படி ரூபாய் 27,000 ஆக உயர்த்தப்படுவதாகவும், தினசரி சம்பளமும் 700 ரூபாவிலிருந்து 1,080 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த மாத சம்பளம் ரூபா 30,000 ஆகவும், தினசரி சம்பளம் ரூபா 1,200 ஆகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.