இலங்கை
தமிழர் பகுதியில் வயோதிப பெண்ணிடம் நகை பறிப்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

தமிழர் பகுதியில் வயோதிப பெண்ணிடம் நகை பறிப்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார்
மட்டக்களப்பு நகரில் உள்ள நல்லையா வீதியில், 78 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் தனது வீட்டு முற்றத்தைத் தும்புத் தடியால் சுத்தம் செய்துக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரது கழுத்தில் இருந்த சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை பறித்து, அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (24) காலை 6:30 மணியளவில், ஆனைப்பந்தி பிள்ளையார் கோவில் சந்திக்கு அருகிலுள்ள வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த அந்தப் பெண், உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.