இலங்கை
திருகோணமலை – கிண்ணியாவில் விபத்து மூவர் காயம்!

திருகோணமலை – கிண்ணியாவில் விபத்து மூவர் காயம்!
திருகோணமலையில் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உப்பாறு பாலத்தில் செவ்வாய்க்கிழமை (22) இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியாவில் இருந்து பயணித்த வான் ஒன்றும் மூதூரில் இருந்து பயணித்த முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று நேருக்குநேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வான் சாரதி உட்பட முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் காயங்களுக்குள்ளாகி கிண்ணியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.