இலங்கை
நிலத்தின் கீழ் பதுக்கப்பட்டிருந்த 86 கைக்குண்டுகள் வவுனியாவில் மீட்பு

நிலத்தின் கீழ் பதுக்கப்பட்டிருந்த 86 கைக்குண்டுகள் வவுனியாவில் மீட்பு
வவுனியா நேரியகுளம் பகுதியில், வீடொன்றில் நிலத்தின் கீழ் பரலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 86 கைக்குண்டுகள், தோட்டாக்கள், பெருமளவு போதை மாத்திரைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பில் நேற்றுமுன்தினம் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டிருந்த நபரொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கொழும்பிலிருந்து வந்திருந்த புலனாய்வுத்துறை அதிகாரிகளும், வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரும் இணைந்து செட்டிகுளம் துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனையை மேற்கொண்டனர். இதன்போதே, வவுனியா நேரியகுளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 86 கைக்குண்டுகள், ரி-56 ரக துப்பாக்கிக்கான தோட்டாக்கள், கைத்துப்பாக்கித் தோட்டாக்கள், 5 ஆயிரத்து 600 போதைமாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இவற்றை உடைமையில் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.