இலங்கை
நேற்றுமுன்தின அகழ்வில் அவதானிக்கப்பட்டது பாலூட்டும் போத்தலே!

நேற்றுமுன்தின அகழ்வில் அவதானிக்கப்பட்டது பாலூட்டும் போத்தலே!
செம்மணி மனிதப்புதைகுழியில் நேற்றுமுன்தின அகழ்வின்போது, குழந்தைக்குப் பாலூட்டும் போத்தலையொத்த (பாற் போச்சி) பொருளொன்று அவதானிக்கப்பட்ட நிலையில், அது பாலூட்டும் போத்தல்தான் என்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகளின் 17ஆம் நாளான நேற்றுமுன்தினம் அந்தப் போத்தல் அவதானிக்கப்பட்டிருந்தது. அது குழந்தைக்குப் பாலூட்டும் போத்தலையொத்ததாகக் காணப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய அகழ்வுப் பணிகளின்போது அது குழந்தைக்குப் பாலூட்டும் போத்தல்தான் என்பது முற்றாகத் தெரிந்துள்ளது.
தொடர்ச்சியாக அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அது மீட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.