இலங்கை
பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது!

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது!
பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞன் ஒருவர் மஹரகம பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (23) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மஹரகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு – மஹரகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் மஹரகம, கொடிகமுவ பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபரான இளைஞனிடமிருந்து மோட்டார் சைக்கிள் , 2 போலி இலக்கத் தகடுகள், 5 கையடக்கத் தொலைபேசிகள், தொலைக்காட்சிப்பெட்டி, கமரா என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த மோட்டார் சைக்கிள் ஹோமாகம பிரதேசத்தில் வைத்து திருடப்பட்டது என தெரியவந்துள்ளது.
அத்துடன், சந்தேக நபர் கொட்டாவை கெஸ்பேவ, மஹரகம ஆகிய பகுதிகளில் வீடுகளின் கதவுகளை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.