Connect with us

இலங்கை

பாலிவுட்டில் பிரபலமாக நினைத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

Published

on

Loading

பாலிவுட்டில் பிரபலமாக நினைத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

பாலிவுட்டில் எப்படியாவது பிரபலமாகி விட வேண்டும் என்பதற்காக படு கவர்ச்சியான உடைகளை அணிந்துக் கொண்டும் வித்தியாசமாக ஆடைகளை அணிந்து வலம் வருபவர் தான் உர்ஃபி ஜாவேத்.

இவர் புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமின்றி சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து நினைத்ததை போலவே சில வருடங்களில் பிரபலமாகி விட்டார்.

Advertisement

தற்போது அவரை 5.3 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார்.

அமேசான் பிரைமில் தனது வாழ்க்கை குறித்த டாக்குமெண்டரி ஷோவையும் வெளியிட்டு பிரபலமானார்.

இந்நிலையில், உதட்டில் ஊசிப்போட்டு தனது லிப் ஃபில்லரை நீக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைத்து இருக்கிறார் உர்ஃபி ஜாவேத்.

Advertisement

மாடலிங் துறையில் கலக்க வேண்டும் என்பதற்காகவும், பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு மும்பைக்கு ஓடி வந்த உர்ஃபி ஜாவேத் தனது 18 வயதிலேயே உதட்டில் லிப் ஃபில்லரை போட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அது சரியாக இல்லை என்றும் 9 ஆண்டுகள் கழித்து அதனை நீக்க முடிவு செய்த நிலையில், உதட்டில் ஊசிப்போட்டு அதன் மூலம் தனது லிப் ஃபில்லரை நீக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் உர்ஃபி ஜாவேத்.

ஆரம்பத்தில், தெரியாத்தனமாக ஒரு டாக்டரிடம் வாயை கொடுத்த நிலையில், ஒழுங்காகவே லிப் ஃபில்லரை வைக்கவில்லை.

Advertisement

அதன் காரணமாகவே நல்ல டாக்டரை தேடிப் பிடித்து தற்போது ஒட்டுமொத்தமாக லிப் ஃபில்லரை நீக்கிவிட்டு இயற்கையான அழகுடன் இருக்கலாம் என முடிவு செய்துவிட்டேன் எனக் கூறியிருக்கிறார் உர்ஃபி ஜாவேத்.

லிப் ஃபில்லரை நீக்கிய உடனே இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என்பதையும் அப்படியே வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார் உர்ஃபி ஜாவேத். அந்த வீடியோவில் அவரது உதடு எல்லாம் வீங்கிப்போய், முகமெல்லாம் வீக்கத்துடன் சிவந்து போய்விட்டது.

கூடிய சீக்கிரமே அனைத்தும் சரியாகி புதிய தோற்றத்துடன் சந்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Advertisement

இதுபோன்ற வீடியோவை வெளியிட உண்மையாகவே உர்ஃபி ஜாவேத்துக்கு தைரியம் வேண்டும் என்றும் சீக்கிரமாகவே இயற்கை அழகுடன் திரும்பி வாங்க என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டுள்ளனர்.

லிப் ஃபில்லருக்கு தான் எதிரி கிடையாது என்றும் நல்ல மருத்துவர்களை தேடிப் பிடித்து செய்யவில்லை என்றால் ஏகப்பட்ட பின் விளைவுகளை ச்ந்திக்க நேரிடும் என்றும் உர்ஃபி தனது சொந்த அனுபவத்தை ஷேர் செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன