இலங்கை
பிள்ளையானின் மனு; விசாரணை தொடரும்! நீதிமன்றம் முடிவு

பிள்ளையானின் மனு; விசாரணை தொடரும்! நீதிமன்றம் முடிவு
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் தாக்கல் செய்துள்ள அடிப்படை மனித உரிமை விசாரணைகளைத் தொடர்வதென நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் (சந்திரகாந்தன்), தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று இடம்பெற்றபோதே, விசாரணைகளைத் தொடர்வதற்கு தீர்மானித்துள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனினும், விசாரணையின் அடுத்த தவணை எப்போது என்று நேற்றுக் குறிப்பிடப்படவில்லை. விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என்று கருதப்படுகின்றது.
பிள்ளையானின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா மற்றும் சட்டத்தரணி உதய கம்மன்பில ஆகியோர் முன்னிலையாகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.