இலங்கை
போலி அதிகாரிகளாக பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!

போலி அதிகாரிகளாக பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!
சுங்கத் திணைக்கள அதிகாரிகள் போன்று போலியாக நடித்து ஆறு இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த இருவர் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை, வத்துவல பிரதேசத்தில் உள்ள ஒருவர் தனது வீட்டை விற்பனை செய்ய உள்ளதாக முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்துள்ளார்.
அதன்படி பெண் ஒருவர் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு வீட்டைக் கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
சில தினங்களில் மேற்படி பெண்ணுடன் மற்றும் ஒருவர் வந்துள்ளார். அவர் இலங்கை சுங்கப்பிரிவில் வேலை செய்வதாகத் தெரிவித்து வீட்டுத் தளபாடங்களை குறைந்த விலையில் பெற்றுத் தர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன்படி இணக்கம் தெரிவித்த வீட்டு உரிமையாளர் 605,000 ரூபா பணத்தை வழங்கப்பட்ட வங்கி கணக்கு இலக்கம் ஒன்றில் வைப்பில் இட்டுள்ளார்.
பல நாட்கள் கழிந்தும் தமக்குறிய பொருட்கள் கிடைக்காத காரணத்தால் அவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்துள்ளார்.
அதன்படி விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பொல்கொல்ல, குண்ணேபான பகுதியில் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இது போன்ற மோசடிகள் இடம்பெற்றுள்ளதா எனப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர்கனை கண்டி நீதிவான் முன் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.