இலங்கை
மட்டக்களப்பில் உலக வங்கியின் அனுசரனையுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்!!

மட்டக்களப்பில் உலக வங்கியின் அனுசரனையுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதி அனுசரனையுடன் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி ஜஸ்டீனா முரளிதரன் தலைமையில் இன்று (23) திகதி இடம் பெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதி அனுசரனையில் முன்னெடுக்கவுள்ள ஐந்து பாரிய திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், குறித்த திட்டங்களை அமுல்படுத்தும் போது ஏற்படும் சவால்கள் தொடர்பாகவும் இதன் போது விசேடமாக ஆராயப்பட்டதுடன், மாவட்ட அரசங்க அதிபரினால் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் போது உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜெயன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், கமநல திணைக்களம், கரையோர பாதுகாப்பு திணைக்களம், நகர திட்டமிடல் அதிகார சபை உள்ளிட்ட துறைசார் திணைக்களங்கள் பலவற்றின் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டு தமது ஆக்கவூர்வமான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்திருந்தனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை