இலங்கை
மீண்டும் அதிகரிக்கும் நிலையில் முட்டையின் விலை!

மீண்டும் அதிகரிக்கும் நிலையில் முட்டையின் விலை!
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையின் விலை 50 ரூபா முதல் 60 ரூபா வரை உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள தீர்க்கப்படா விட்டால் எதிர்வரும் காலத்தில் முட்டையின் விலை உயரும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மேலும் எச்சரித்துள்ளது.