பொழுதுபோக்கு
மைனர் பெண்னை வைத்து சீமானுக்கு ஸ்கெட்ச், ரூ80 லட்சம் டார்கெட்: ராஜ் கண்ணன் பற்றி ரிஹானா அதிர்ச்சி தகவல்!

மைனர் பெண்னை வைத்து சீமானுக்கு ஸ்கெட்ச், ரூ80 லட்சம் டார்கெட்: ராஜ் கண்ணன் பற்றி ரிஹானா அதிர்ச்சி தகவல்!
சின்னத்திரை நடிகை ரிஹானா மீது ராஜ் கண்ணன் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதாகவும், தன்னிடம் வீடு வாங்கி கொடுக்க வேண்டும் என்று டார்ச்சர் செய்ததாகவும் புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து ரிஹானா ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பல தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல முக்கிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிஹானா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில், கணவரை பிரிந்த இவர் தனியாக தனது அம்மாவுடன் வசித்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் ராஜ் கண்ணன் என்பவர் ரிஹானா தன்னை மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விவகாரத்தில் என்ன நடந்துது என்பது குறித்து ரிஹானா யூடியூப் சேனல்களில் பேசி வரும் நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், “நான் மோசடி செய்தேன், கல்யாண மோசடி செய்தேன், ஆசை காட்டி பணம் பறித்தேன் என்றெல்லாம் சொல்கிறார். அத்தனையும் பொய். அவர் தான் எனக்கு காசு கொடுக்க வேண்டும். அவனது உண்மையான பெயர் அழகர்சாமி. பான்கார்டு, ஆதார்கார் என என தனது அடையாளங்களை மாற்றிக்கொண்டு உருவத்தையும் மாற்றிக்கொண்டான்.அவன் தொழில் அதிபர் கிடையாது. சாதாரண ஏஜெணட். பெண்களை வைத்து வியாபாரம் செய்வது தான் இவனது தொழில். அப்பப்போ ரெஸ்ரோ பார்க்கு என்னை அழைத்து செல்வான். இந்த பயணத்தின்போது பெண்கள் மாட்டினால் வியாபாரம் செய்துவிடுவான் இல்லை என்றால் அவர்களிடம் இருந்து பணத்தை பறித்துவிடுவான் என்று சொன்னார்கள். நீ ஜாக்கிரதையா இருமா என்று எல்லாரும் என்னிடம் சொன்னார்கள். பணம் கொடுப்பதற்கு முன் அவனை பற்றி எனக்கு தெரியாது. கொடுத்த பிறகுதான் அவனது சுயரூபம் எனக்கு தெரியவந்தது.அவனது காரில் அரிவாள் கத்தி எப்போதும் இருக்கும். இது நிஜம். நான் அவனிடம லாக் ஆகிவிட்டேன். என் பணம் அவனிடம் இருக்கிறது அதனால் தான் நான் புகார் கொடுக்கவில்லை. அந்த பணத்தை வாங்கிக்கொண்டு மறுநாள் நாள் புகார் கொடுக்கலாம் என்று இருந்தேன். அதற்குள் இந்த நாடகம் ஆடிவிட்டான். தாலி கட்டியது, அபியூஸ் பண்ணது, பணம் தான் கொடுத்துவிட்டு மாட்டிக்கொண்டோம். என்னையும் கொடுக்க முடியாது. தாலி கட்டிய அன்று அவனுடன் தங்கியதால் ஒன்றும் சொல்லவில்லை. மறுநாள் நான் எனது குழந்தையை பார்க்க வந்து இங்கே தங்கிவிட்டேன். அந்த ஆத்திரத்தில் தான் இப்படி செய்துவிட்டான்.கல்யாண ஆசை காட்டி மோசடி செய்தேன் என்று சொன்னான். அது பொய் என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. இதை பற்றி அவனது நண்பரிடம் சொல்லும்போது அவன் ரவுடி இல்லை நல்லவன் தாளி கட்டியாச்சி வாழ வேண்டியதானே என்று சொன்னார். ஜெயிலுக்கு போய்விட்டு வந்தவர் என்று தெரிந்தும் எப்படி வழ முடியும். சீமான் விஜயலட்சுமி சர்ச்சை அதிகமாக இருந்த சமயத்தில், இதில் என்ன செய்யலாம் என்று காரில் உட்கார்ந்து ஸ்கெட்ச் போட்டான்.”ஒருவர் ஃபிரேமில் இருந்தால், அவரை டீஃபிரேம் செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வார்கள். அவர்களுக்கு மற்றொரு இலக்கும் உள்ளது தெரியுமா? கிட்டத்தட்ட 80 லட்சம் ரூபாய் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. சீமான் சாருக்கு ஏதாவது ஒரு மைனர் பெண் தொடர்பு இருந்தால், அந்த மைனர் பெண்ணை வைத்து சீமான் சாரை தொடர்பு கொண்டு, சிசிடிவி கேமரா காட்சிகளைக் காட்டி பேரம் பேசியுள்ளான். ‘இப்படிச் செய்தால் உனக்கு 80 லட்சம் ரூபாய் கிடைக்கும்’ என்று கூறினான்.அந்த 80 லட்சத்தில் 60 லட்சத்திற்கு எனக்கு பிளாட் வாங்கிக் கொடுப்பதாகவும், 10 லட்சத்திற்கு இன்டீரியர் செய்து கொடுப்பதாகவும் அவன் திட்டமிட்டுள்ளான். “இவ்வளவு நம்பகத்தன்மையுடன் அவனுடன் நான் பயணித்துள்ளேன். இதனால் அவன் என்மீது காதல் மற்றும் பாசம் கொண்டிருப்பதாக நடித்து, இந்த மாதிரியான சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளான்.அவன் வீட்டில் கொகைன் இருக்கும். போதைப்பொருட்களை (சப்ளை) அவன் வீட்டில் வைத்திருக்கிறான். அவன் வீட்டில் எப்போதும் பெண்கள் இருப்பார்கள். கேட்டால், ‘பெண், தங்கை, அக்கா’ என்று சொல்வான். இலங்கையிலிருந்து ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து 5-6 வருடங்களாக வீட்டில் தங்க வைத்துள்ளான். ஆனால் அவனுக்கு எந்த அடையாள அட்டையும் இல்லை – பான் கார்டோ, ஆதார் கார்டோ எதுவுமே இல்லை. அவன் செய்யும் அத்தனையுமே சட்டவிரோதமானவை.“ஏமாற்றப்பட்டது நான்தான்” – சின்னத்திரை துணை நடிகை ரிஹானா ஆவடி காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார்#Reehana | #SerialActressReehana | #Pandiyanstoreactressreehana | #Reehanaaudio #Reehanawhatsapp pic.twitter.com/j8T2oGTdWQஇந்த ராஜ்கணனும், இவனும் இருவரும் சேர்ந்து மோசடிச் சாம்ராஜ்யம் நடத்துகிறார்கள். எப்படி என்றால், தனியாக இருக்கும் பெற்றோர்களை (சிங்கிள் பேரண்ட்) குறிவைக்கிறார்கள். அவர்களிடம் பணம் இருந்தால் பறிக்கிறார்கள். ஓரளவு அழகு இருந்தால், அதை வைத்து வியாபாரம் செய்கிறார்கள். பெண்கள் மற்றும் இளைஞர்களைப் பயன்படுத்துகிறார்கள். இதில் சிக்கி நிறைய பேர் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். ‘தப்பித்தால் போதும், தூர விலகி இருக்க வேண்டும்’ என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அவர்கள் அனைவரும் விலகி நிற்கிறார்கள்.இன்றும்கூட எனக்கு போன் வருகிறது. மீடியாவில் வந்த பிறகு, ‘நானும் பாதிக்கப்பட்டேன், நானும் பாதிக்கப்பட்டேன்’ என்று சொல்கிறார்கள். ஆனால் யாரும் கேமரா முன் வரவோ, கமிஷனர் அலுவலகத்திலோ, காவல் நிலையத்திலோ சாட்சி சொல்ல முன்வர மாட்டார்கள். எல்லோருக்கும் உயிருக்கு பயம் காட்டி வைத்திருக்கிறான். அவர்களிடம் பணம் இல்லை. ஆனால் அங்கங்கே ஒரு தொடர்பை வைத்து மிரட்டுகிறான். என்னையும் அப்படித்தான் மிரட்டினான். நான் இவ்வளவு தைரியமாகப் பேசுகிறேன் அல்லவா? நான் சாக வேண்டும் என்றுதான் இருந்தேன். அந்த அளவுக்கு என்னை மிரட்டினான் என்று கூறியுள்ளார்.