சினிமா
ரஜினியின் பாட்ஷா தான் என் முதல் தமிழ் படம்…!நேர்காணலில் மனம் திறந்த பகத் பாசில்

ரஜினியின் பாட்ஷா தான் என் முதல் தமிழ் படம்…!நேர்காணலில் மனம் திறந்த பகத் பாசில்
தமிழ் சினிமா ரசிகர்களுக்காக புதிய சுவை தரவிருக்கும் திரைப்படம் ‘மாரீசன் திரையில் வெளியாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. வடிவேலுவும் மலையாளத் திறமைசாலி பகத் பாசிலும் இணைந்து இப்படத்தில் நடித்து உள்ளனர்.இத்திரைப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். கிரியேட்டிவ் டைரக்டராக கிருஷ்ணமூர்த்தி பணியாற்றியுள்ளார். கதையும், திரைக்கதையும், வசனத்தையும் எழுதியிருக்கிறார். திரைப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, பி.எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, டெலிபோன் ராஜா, சித்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகத் பாசில், தன்னுடைய தமிழ்த் திரைப்பட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். “நான் முதன்முதலாக தமிழில் தியேட்டரில் பார்த்த திரைப்படம் ‘பாட்ஷா’. நண்பர்களுடன் பள்ளியை கட் அடித்து பார்த்தேன். ரஜினியின் “என் பேரு மாணிக்கம் எனக்கு இன்னொரு பேரு இருக்கு” போன்ற வசனங்களை மெய் மறந்து ரசித்தேன்,” என கூறியுள்ளார்.இது அவரது தமிழ் சினிமா மீதான காதலை வெளிப்படுத்துகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத வகையில் வடிவேலுவும் பகத் பாசிலும் ஒரே திரையில் இணையும் ‘மாரீசன்’ திரைப்படம், விமர்சன ரீதியாகவும், பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.