இலங்கை
ரம்புட்டானினால் ஏற்படும் உயிரிழப்பு – சுகாதார பிரிவு எச்சரிக்கை!

ரம்புட்டானினால் ஏற்படும் உயிரிழப்பு – சுகாதார பிரிவு எச்சரிக்கை!
ரம்புட்டான் பழங்களினால் நாட்டில் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜூலை மாத காலத்தில் அதிகளவில் ரம்புட்டான் பழங்கள் விற்பனை செய்யப்படுவதால் இந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் ரம்புட்டான் பழங்களை அறுவடை செய்கின்றனர்.
இதனால் ரம்புட்டான் தோட்டங்களை சுற்றி மின்சார வேலிகள் பொருத்தப்பட்டிருப்பதால் பலர் மின்சாரம் தாக்கி உயிரிழக்கின்றனர்.
இன்னும் சிலர் மின்சாரம் தாக்கி காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.
ரம்புட்டான் விதைகள் தொண்டையில் சிக்கி சிறுவர்களும் உயிரிழக்கின்றனர்.
எனவே, சிறுவர்களுக்கு ரம்புட்டான் பழங்களை சாப்பிட கொடுக்கும் போது பெற்றோர் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.