இலங்கை
வடக்குக் கடற்பரப்பில் கொந்தளிப்பான நிலை; மீனவர்களே அவதானம்

வடக்குக் கடற்பரப்பில் கொந்தளிப்பான நிலை; மீனவர்களே அவதானம்
வடமாகாணக் கடற்பரப்பு கொந்தளிப்புடன் காணப்படும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் உள்ளதாவது:-
வடமாகாணம், வடமத்திய மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் என்பன கடும் கொந்தளிப்புடன் காணப்படும். நாடு முழுவதும் நிலவும் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக, இந்த மாவட்டங்களில் மணிக்கு 55 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் – என்றுள்ளது.