Connect with us

சினிமா

வடிவேலு நடித்த ‘மாரீசன்’ படத்தின் பத்திரிகையாளர் ஷோவை பார்த்தவர்கள் சொல்வது இதுதான்…!

Published

on

Loading

வடிவேலு நடித்த ‘மாரீசன்’ படத்தின் பத்திரிகையாளர் ஷோவை பார்த்தவர்கள் சொல்வது இதுதான்…!

தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டு வரும் காமெடி நடிகர் வடிவேலு, மீண்டும் ஒரு மாறுபட்ட கதையில் நடித்து வெளிவரவுள்ள படம் தான் ‘மாரீசன்’. ஏற்கனவே ‘மாமன்னன்’ மற்றும் ‘கேங்கர்ஸ்’ படங்களில் தனது நடிப்பால் அனைவரையும் ரசிக்க வைத்த வடிவேலு, இந்த முறையும் அசத்தப் போவதாக பத்திரிகையாளர் காட்சி வட்டார விமர்சனங்கள் சொல்கின்றன.இந்த படம் நாளை (ஜூலை 25) உலகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. அதற்கான புரொமோஷன்களின் ஒரு பகுதியாக, நேற்று சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ‘மாரீசன்’ திரைப்படம் முன்னோட்டமாக திரையிடப்பட்டது. இதில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள் மற்றும் திரையரங்க விமர்சகர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.படத்தை பார்த்த ஒருவர், “படம் ஸ்லோவாக ஆரம்பிச்சாலும், இடைவேளை காட்சி goosebumps கொடுத்துச்சு! இரண்டாவது பாதி முழுக்க பரபரப்பாக ஓடியிருக்கு. முக்கியமாக படம் முடிவில் கொடுத்திருக்கும் சமூகக் கருத்து (Social Message) வித்தியாசமாக, யோசிக்க வைக்கும் வகையில் இருந்துச்சு. ஃபகத் பாசில் தனது ஸ்டைலிலேயே அசத்தினார். ஆனால் அதை முழுக்க முழுக்க ‘Steal the Show’ பண்ணது வடிவேலு தான்!”மேலும், மற்றொரு ரசிகர், “ஒரு முதியவரின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்ட படம். அதில் நகைச்சுவை, உணர்ச்சி, மற்றும் வாழ்க்கையின் மறைந்த உண்மைகளை நன்றாக இணைத்து சொல்லியிருக்கிறார்கள். ஒரு வயதான நபரின் மன நிலை, அவர் சந்திக்கும் சிக்கல்கள், ஏமாற்றங்கள் எல்லாமே நம் நெஞ்சை நெகிழ வைக்கிறது.” என்றார். படத்தின் சிறப்பம்சமாக இருப்பது வடிவேலு. இவர் தற்போது வயதான கதாபாத்திரங்களை ஆர்வமாக தேர்வு செய்து நடிக்கிறார். முன்னதாக ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ போன்ற படங்களில் முழுக் காமெடியை காட்டியிருந்தாலும், ‘மாமன்னன்’, ‘கேங்கர்ஸ்’ ஆகிய படங்களில் மாறுபட்ட டைமிங் மற்றும் அமைதியான நடைமுறை நடிப்பை வெளிப்படுத்தினார். அதேபோல், ‘மாரீசன்’ படத்திலும் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார் என்பதை பெரும்பாலான விமர்சனங்களின் மூலம் அறிய முடிகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன