இலங்கை
வவுனியாவில் பரசூட் முறையில் விதைப்பு செய்த நெல் அறுவடை விழா!

வவுனியாவில் பரசூட் முறையில் விதைப்பு செய்த நெல் அறுவடை விழா!
பரசூட் முறையில் விதைப்பு செய்யப்பட்ட நெல் அறுவடை வயல் விழா வவுனியா தாண்டிகுளம் பகுதியில் இன்று இடம்பெற்றது.
விவசாய திணைக்களத்தின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் 70 ஏக்கர் வயலில் விவசாயிகளின் பங்களிப்போடு பரசூட் முறையில் நெல் விதைப்பு சிறுபோகத்திற்காக இடம்பெற்று இருந்தது.
இதன் அறுவடை வயல் விழா தாண்டிக்குளத்தில் உள்ள மு.தேவராசா என்பவரின் வயலில் பிரதம மாகாண விவசாய பணிப்பாளர் ஜே.எம்.முரளிதரன் தலைமையில் பாடவிதான உத்தியோகத்தர் கு.கஜரூபனின் வழிகாட்டலில் வவுனியா அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத் சந்திர பிரதம விருந்தினராக கலந்து கொண்ட நிலையில் அறுவடை இடம்பெற்றது.
இதன்போது அதிகளவான விளைச்சல் கிடைக்கப்பெற்றமை அவதானிக்கப்பட்டதுடன், புள்ளிவிவர திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டு அதனை உறுதிப்படுத்தியிருந்தனர்.