Connect with us

இலங்கை

வவுனியா ரயில் நிலையம் அருகே தீ பரவல் ; துப்புரவுப் பணியில் கவனயீனம்!

Published

on

Loading

வவுனியா ரயில் நிலையம் அருகே தீ பரவல் ; துப்புரவுப் பணியில் கவனயீனம்!

வவுனியா – ரயில் நிலையத்திற்கு அருகாமையில் திடீரென தீப்பற்றியதில் அப்பகுதியில் சிலமணிநேரம் பதற்ற சூழல் உருவாகியது. 

இந்த தீ விபத்துச் சம்பவம் நேற்று(23) இரவு 7 மணியளவில் வவுனியா ரயில் நிலையம் அருகே இடம்பெற்றுள்ளது. 

Advertisement

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

வவுனியா  ரயில் திணைக்களத்திற்குச்  சொந்தமான விடுதிகள் மற்றும் ரயில்  நிலையப் பகுதி என்பன துப்பரவு செய்யப்பட்டு வருகின்றது.

துப்புரவுப் பணிகளின் போது  வவுனியா ரயில்  நிலையம் அருகில் இருந்த மரம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

Advertisement

இதனை அவதானித்த மக்கள்  உடனடியாக வவுனியா மாநகரசபைக்குத் தகவல் வழங்கினர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகரசபை தீயணைப்புப் பிரிவினர் துரிதமாக செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 

தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ரயில் நிலையத்திற்கு அருகே  துப்புரவுப் பணியில் ஈடுபட்டவர்களின் கவனக்குறைவால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன