இலங்கை
வாழைப்பழ விவசாயிகளுக்கு பெரும் நட்டம்!

வாழைப்பழ விவசாயிகளுக்கு பெரும் நட்டம்!
இலங்கையின் பல பகுதிகளில் வாழைப்பழ உற்பத்தி அதிகரித்துள்ள போதும், தற்போது சந்தையில் விற்பனை வீழ்ச்சி பெரிதாக காணப்படுகிறது.இதனால் விவசாயிகள் பெரும் நட்டத்தில் சிக்கியுள்ளனர்.
முந்தைய மாதங்களில் ஒரு கிலோ வாழைப்பழத்திற்கு ரூ. 120 வரை கிடைத்த விலை, தற்போது ரூ. 40 முதல் ரூ. 60 வரை குறைந்துள்ளதால், விவசாயிகள் பழங்களை வெறும் சாலையோரங்களில் கழிவாகவே வீசும் நிலை உருவாகியுள்ளது.
இந்தநிலையில், தம்புத்தேகம பொருளாதார நிலையத்தில் தினமும் 500 கிலோ வாழைப்பழங்கள் அகற்றப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வாழைப்பழங்கள் அதிகமாக இருப்பதாலும், வாழைப்பழ விற்பனை குறைந்ததாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
பொருளாதார நிலையத்தில் புளி வாழைப்பழம் 10 ரூபாய்க்குக் கூட விற்கப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் மேலும் தெரிவித்தனர்.