பொழுதுபோக்கு
ஹாஸ்பிடலில் ரஜினிகாந்த்; கூட்டத்தை கட்டுப்படுத்த திணறிய போலீஸ்: காவலுக்காக வாட்ச்மேனாக மாறிய கேப்டன்!

ஹாஸ்பிடலில் ரஜினிகாந்த்; கூட்டத்தை கட்டுப்படுத்த திணறிய போலீஸ்: காவலுக்காக வாட்ச்மேனாக மாறிய கேப்டன்!
உடல் நலக்குறைவு காரணமாக ரஜினிகாந்தை மருத்துவமனையில் அனுமதித்திருந்த சூழலில், விஜயகாந்த் செய்த உதவியை ஜாக்குவார் தங்கம் நினைவு கூர்ந்தார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இந்த தகவலை அவர் பதிவு செய்துள்ளார்.தமிழகத்தின் சினிமா மற்றும் அரசியல் வரலாறை எடுத்துக் கொண்டால், அதில் விஜயகாந்தின் பங்களிப்பு மிகப் பெரியதாக இருக்கும். அந்த அளவிற்கு இரு துறைகளிலும் ஆளுமை மிக்க மனிதராக விஜயகாந்த் இருந்தார். ஏனெனில், நஷ்டத்தில் இருந்து நடிகர் சங்கத்தை லாபகரமாக மாற்றுவதற்கு அனைத்து நடிகர்களையும் அழைத்துச் சென்று கலை விழா நடத்திய பெருமை விஜயகாந்திற்கு இருக்கிறது. இது விஜயகாந்த் என்ற ஒரு மனிதரால் மட்டுமே சாத்தியமானது என்று பலரும் கூறி நாம் கேட்டிருப்போம்.இதே போன்றதொரு ஆளுமையை தனது அரசியல் களத்திலும் விஜயகாந்த் வெளிப்படுத்தினார். தமிழ்நாட்டு அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா என்று இரு பெரும் தலைவர்கள் முதன்மையாக இருந்த நேரத்தில் மூன்றாவதாக ஒரு தலைவர் உருவாக முடியும் என்று எடுத்துக் காட்டியவர் விஜயகாந்த். இவை அனைத்திற்கும் அரசியலில் அவர் அடைந்த வெற்றிகளே சாட்சியாக இருக்கிறது. இந்த சூழலில் ரஜினிகாந்தை மருத்துவமனையில் அனுமதித்திருந்த நேரத்தில், விஜயகாந்த் செய்த உதவியை சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார்.அதன்படி, “உடல் நலக்குறைவால் ரஜினிகாந்தை மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, மருத்துவமனை அருகே அதிக அளவில் கூட்டம் கூடியது. போலீஸாரால் கூட அந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவானது. அந்த சூழலில், சம்பவ இடத்திற்கு விஜயகாந்த் வருகை தந்தார். அங்கு கூடியிருந்த மொத்தக் கூட்டத்தையும் விஜயகாந்த் எளிதாக அப்புறப்படுத்தினார். மேலும், வாட்ச்மேன் இடத்தில் அமர்ந்து, கூட்டத்தை பார்த்துக் கொள்வதாக விஜயகாந்த் கூறினார்.நடிகர் சங்கத்தின் தலைவர், பல கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபர், உலகம் முழுவதும் எத்தனையோ ரசிகர்கள் இருக்கும் ஒரு நபர் வாட்ச்மேன் போன்று அமர்ந்தார். அப்படி ஒரு குணம் விஜயகாந்திற்கு மட்டும் தான் இருக்கும். தனது சக நடிகரின் பாதுகாப்புக்காக, மருத்துவமனையில் வாட்ச்மேன் போன்று அமர்ந்த தன்மை விஜயகாந்திற்கு மட்டுமே இருந்தது” என சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார்.