பொழுதுபோக்கு
12 நாட்கள் தொடர் ஹவுஸ்ஃபுல்; எம்.ஜி.ஆர் பட சாதனையை முறியடித்த அஜித்தின் இந்த படம்: மெகஹிட் படம்தான்!

12 நாட்கள் தொடர் ஹவுஸ்ஃபுல்; எம்.ஜி.ஆர் பட சாதனையை முறியடித்த அஜித்தின் இந்த படம்: மெகஹிட் படம்தான்!
எம்.ஜி.ஆர் திரையுலகில் மாஸாக செய்த ஒரு சாதனையை, அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் திரைப்படம் முறியடித்ததாக அந்த படத்தின் இயக்குனர் சரவண சுப்பையா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆர் படங்கள் மாஸாக இருந்தாலும், சிவாஜி நடிக்கும் படங்கள் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளாக இருக்கும். ஆனாலும் வசூலில் எம்.ஜி.ஆர் சிவாஜியை விட உயரத்தில் இருந்தவர். ஏழைய எளிய மக்களின் வாழ்வியலை எடுத்து கூறும் வகையிலான கேரக்டரில் நடித்து புகழ்பெற்ற எம்.ஜி.ஆர், ரிக்ஷாக்காரன் திரைப்படத்தில் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளியாக நடித்திருந்தார்,ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த ரிக்ஷாகாரன் திரைப்படம், தொடர்ந்து 12 நாட்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக தேவி பாரடைஸ் திரையரங்கில் ஓடியுள்ளது. 1971-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் எம்.ஜி.ஆருடன், பத்மினி, மஞ்சுளா சோ ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் இந்த படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இந்த படம் ஃபேவரெட்.சென்னையில், 12 நாட்கள் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல்லாக ஓடியுள்ளது. இந்த சாதனையை எந்த படமும் முறியடிக்காத நிலையில், 2001-ம் ஆண்டு சரவண சுப்பையா இயக்கத்தில் வெளியான அஜித்தின் சிட்டிசன் திரைப்படம் இந்த சாதனையை முறியடித்துள்ளது. அஜித், மீனா, வசுந்தா தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படத்தில் ஒரு பவர்ஃபுல் போலீஸ் அதிகாரியாக நடிகை நக்மா ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார், தேவா இசையமைத்த இந்த படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரித்திருந்தார்,பெரிய வெற்றிப்படமாக அமைந்த இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதேபோல், மறைந்த நடிகர் பாண்டியன் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் குறித்து இயக்குனர் சரவண சுப்பையா ஒரு பேட்டியில் கூறுகையில், ‘சிட்டிசன்’ திரைப்படம் வெளியாகி முதல் நாள், முதல் காட்சி, ரசிகர்களோடு தியேட்டரில் அமர்ந்து படம் பார்த்த அந்த அனுபவம் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. சக்கரவர்த்தி சார் பகிர்ந்துகொண்ட ஒரு தகவல்.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ‘ரிக்ஷாகாரன்’ திரைப்படம் தொடர்ந்து 12 நாட்கள் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியதாம். அதற்குப் பிறகு, ‘சிட்டிசன்’ படம்தான் 15 நாட்களாகத் தொடர்ந்து அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் என்ற பெருமையைப் பெற்றது என்று தேவி பாரடைஸ் தியேட்டரில் இருந்து சொன்னதாக கூறினார். நானே என் குடும்பத்துடன் படம் பார்க்கச் சென்றபோது, எனக்கு சீட் கிடைக்கவில்லை. நின்றுதான் பார்க்க வேண்டியிருந்தது.என் அம்மா, அப்பாவால் நிற்க முடியாது என்பதால், நான் படம் பார்க்க வந்திருக்கிறேன் என்று தெரிந்ததும், தியேட்டர் ஊழியர்கள் ஒரு சேர் போட்டார்கள். என் அப்பா வயதானவர் என்பதால், அவர் அமர்ந்துகொண்டார். நான் நின்றுதான் முழு படத்தையும் பார்த்தேன். ஒவ்வொரு காட்சியிலும் அன்று நான் கண்ட அஜித் சாரை, அவரது வளர்ச்சியை, அவர் எங்கிருந்து எங்கெல்லாம் பயணிக்கிறார் என்பதை என்னால் அப்போதே உணர முடிந்தது.அஜித் சாரின் சகோதரர் ஒருவரும் நானும் தான் படத்தை பார்த்தோம். அஜித் சார் அப்போது ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் படப்பிடிப்புக்காக விசாகப்பட்டினத்தில் இருந்தார். அவருக்காக அங்கே தனியாக ஒரு திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தை பார்த்து முடிந்ததும், எனக்கு தொலைபேசி செய்து, செம்மயா பண்ணிருக்கீங்க சரோ என்று வாழ்த்துகள் தெரிவித்தார் என்று இயக்குனர் சரவண சுப்பையா கூறியுள்ளரார்,