இலங்கை
பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பேச்சாளர் பதவியேற்பு

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பேச்சாளர் பதவியேற்பு
பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் பேச்சாளராக பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப், செவ்வாய்க்கிழமை (22) உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுவரை காலம் ஊடக பணிப்பாளர் மற்றும் பேச்சாளராக பணியாற்றிய கேர்னல் நலின் ஹேரத்திடமிருந்தே அவர் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இலங்கை இராணுவப் பொறியியாளர் படையணியின் புகழ்பெற்ற அதிகாரியான பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப், தொழில்முறை, தலைமைத்துவம் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக கூடிய அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறார்.
சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சிறந்த சேவைாற்றி வரும் இவர், ஊடக பணிப்பாளராக பொறுப்பேற்பதற்கு முன்னர், இலங்கை பொறியியாளர் படையணியின் மையத் தளபதியாக சிறப்பாக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.