பொழுதுபோக்கு
ஃபேன்டஸி படத்தில் ரஜினி வில்லன், ஹீரோ யாரை வைக்கலாம்னு தெரியலை; கூலிக்கு முன் இதுதான் ப்ளான்: லோகேஷ் அப்டேட்

ஃபேன்டஸி படத்தில் ரஜினி வில்லன், ஹீரோ யாரை வைக்கலாம்னு தெரியலை; கூலிக்கு முன் இதுதான் ப்ளான்: லோகேஷ் அப்டேட்
ஆகஸ்ட் 14-ம் தேதி அன்று ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, அமீர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் ரஜினியுடன் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.ஆனால் கூலி படத்திற்கு முன்பாகவே ரஜினியை வில்லனாக வைத்து வேறொரு படம் இயக்கத் திட்டமிட்டிருந்ததாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். படத்தின் கதை அனைவருக்கும் பிடித்து இருந்தாலும் ஆனால் படம் கைக்கூடவில்லை என்று தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அப்படத்திற்கு முன்பு ரஜினிக்காக தான் வைத்திருந்த ஒரு ஃபேன்டஸி கதை பற்றி லோகேஷ் கனகராஜ் மனம் திறந்துள்ளார்.”கூலி கதைக்கு முன்பு, ரஜினியை வில்லனாக வைத்து ஒரு ஃபேன்டஸி கதையை உருவாக்க திட்டமிட்டிருந்தேன்,” என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். “அந்தக் கதையில் ரஜினிதான் வில்லன், நாயகனாக யாரை நடிக்க வைப்பது என்று ஆலோசித்துக் கொண்டிருந்தோம். ரஜினி உட்பட யாருமே அந்தக் கதையை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், அந்தக் கதையை படப்பிடிப்பு தளத்திற்கு கொண்டு வர ஒன்றரை வருடங்களுக்கும் மேல் தேவைப்பட்டது. ஏனெனில் அதில் நிறைய நடிகர்களும், பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளும் இருந்தன.”ரஜினி சாரின் தேதிகளை வீணடிக்க லோகேஷ் விரும்பவில்லை. மேலும், அவருக்கு சில தனிப்பட்ட பிரச்சனைகளும் இருந்தன. இதன் காரணமாக, ஒரு நாள் ரஜினியை தொலைபேசியில் அழைத்து, “இந்தக் கதையை இப்போதைக்கு எடுக்க இது சரியான நேரமில்லை, என்னிடம் வேறொரு கதை இருக்கிறது,” என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அப்படி உருவான கதைதான் ‘கூலி’.”ரஜினியை வில்லனாக காட்ட மிகவும் பொருத்தமான கதை, நான் முதலில் வைத்திருந்த ஃபேன்டஸி கதைதான். அது அவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. அந்தக் கதையைக் கேட்டு அவர் மிகவும் சந்தோஷப்பட்டார்,” என்று லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டுள்ளார். “ஏனோ சில காரணங்களால் அந்தப் படம் கைகூடவில்லை,” என்றும் அவர் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.