பொழுதுபோக்கு
அட்வான்ஸ் கூட வாங்காமல்… சிவாஜி உதவியால் ரிலீசான படம்; தப்பிப் பிழைத்த பெரிய இயக்குனர்

அட்வான்ஸ் கூட வாங்காமல்… சிவாஜி உதவியால் ரிலீசான படம்; தப்பிப் பிழைத்த பெரிய இயக்குனர்
தமிழ் சினிமாவின் புதுமை இயக்குனர் என்று அறியப்பட்டவர் ஸ்ரீதர். முன்னணி நடிகர்களுடன் இணநை்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், முதன் முதலில் படத்தை தயாரிக்கும்போது நடிகர் சிவாஜி கணேசன், ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.1954-ம் ஆண்டு வெளியான ரத்த பாசம் என்ற படத்தின் மூலம் கதை மற்றும் திரைக்கதை ஆசிரியராக சினிமாவில் நுழைந்தவர் தான் சி.வி.ஸ்ரீதர். அதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு, சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் வெளியான எதிர்பாராதது என்ற படத்திற்கும் கதை, திரைக்கதை வசனம் எழுதியிருந்தார். இந்த படத்தின் மூலம் சிவாஜி மற்றும் பத்மினி இருவருடனும் ஸ்ரீதருக்கு நெருக்கிய நட்பு கிடைத்தது,எதிர்பாராதது படத்திற்கு பிறகு, மகேஷ்வரி, லட்சாதிபதி, மாமன் மகள் ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதிய ஸ்ரீதர் ஒரு கட்டத்தில் தனது நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோவிந்தராஜன் ஆகிய மூவரும் சேர்ந்து சொந்தமாக படம் தயாரிக்க முடிவு செய்து, வீனஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் படமாக, ஸ்ரீதர் கற்பனை செய்து வைத்திருந்த அமரதீபம் கதையை தனது நண்பர்களுக்கு சொல்ல அவர்களுக்கும் கதை பிடித்திருந்தது.இந்த படத்திற்கு ஹீரோ சிவாஜிதான் என்று சொன்ன ஸ்ரீதர், ஹீரோயின்களாக பத்மினி, சாவித்ரி பெயரை கூறியுள்ளார். படத்திற்கு இயக்குனர் டி பிரகாஷ்ராவ், இசைக்கு சலபதிராம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எல்லாம் முடிவு செய்யப்பட்டாலும், பணத்திற்கு என்ன செய்வது என்ற பேச்சு வரும்போது, என்னால 5000 ரூபாய் ரெடி பண்ண முடியும் ஸ்ரீதர் கூறியுள்ளார். அப்போத ஸ்ரீதருக்கு ஒரு யோசனை தோன்றியது.எதிர்பாராதது படத்தில் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக சிவாஜியை சந்தித்து அமரதீபம் கதையைச் சொன்னார். கதை பிரமாதம் என்று சிவாஜி தட்டிக்கொடுக்க, நாயகிகளாக பத்மினி, சாவித்ரி, இயக்குனர் பிரகாஷ் ராவ், இசையமைப்பாளரர் சலபதி ராவ் ஆயியோரை முடிவு செய்துள்ளதாகவும், படம் தயாரிக்க போதிய பணம் இல்லை என்று ஸ்ரீதர் கூறியுள்ளார். மேலும், அண்ணா உங்களுக்கே அட்வான்ஸ் கொடுக்கறதுக்குனும் இப்ப எங்கிட்ட பணம் இல்ல. உங்களோட பேர போட்டு விளம்பரம் செய்ய அனுமதி கொடுங்க. அந்த விளம்பரத்தைப் பாத்தா வினியோகவஸ்தர்களும், ஃபைனான்சியர்களும், பணம் கொடுப்பாங்க. அந்த டைம்ல உங்களுக்கே அட்வான்ஸ் கொடுக்கிறோம் என்று ஸ்ரீதர் கூறியுள்ளர்.ஸ்ரீதரின் பேச்சுக்கு சிவாஜியும் சம்மதம் சொல்ல, பத்மினி, சாவித்ரி இருவரும் சிவாஜி வழியிலேயே சம்மதம் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, நாளிதழ்களில் அமரதீபம் விளம்பரம் முழுப்பக்கங்களாக வெளியானது. அதையடுத்து பைனான்சியர்கள் முதலீடு செய்ய போட்டிப் போட்டுக்கொண்டு முன்வந்தார்கள். படவேலைகள் துரிதமாக நடக்க ஆரம்பித்தன. அமரதீபம் திரைப்படம் செப்டம்பர் 29, 1956 என்று வெளியவந்து மாபெரும் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது,