இலங்கை
இராணுவ முகாமில் ஆயுதங்கள் திருட்டு ; CIDயினர் வெளிப்படுத்திய அதிர்ச்சி தகவல்

இராணுவ முகாமில் ஆயுதங்கள் திருட்டு ; CIDயினர் வெளிப்படுத்திய அதிர்ச்சி தகவல்
மின்னேரியா இராணுவ முகாமின் ஆயுதக்களஞ்சியத்தில் ஆயுதத் திருட்டில் ஈடுபட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒன்றின் உறுப்பினர் ஒருவரை, கைது செய்யும் வகையில் விசாரணைகள் இடம்பெறுவதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிமம் இல்லாமல் ரி-56 ரக துப்பாக்கியை வைத்திருந்தமை தொடர்பாகவும், குறித்த சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக குற்றப்புலனாய்வுத்துறையினர், கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
எம்.கே. அமில சந்திரானந்த அல்லது நாரஹேன்பிட அமில என்றும் அழைக்கப்படுகின்றவரே தேடப்பட்டு வருகிறார்.
முன்னதாக சந்தேக நபருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ரி-56 ரக துப்பாக்கி, ஹோமாகம பகுதியில் உள்ள வியாபாரத்தளம் ஒன்றில் மீட்கப்பட்டது.