Connect with us

இலங்கை

எதிர்கால உலகுக்கு பொருத்தமான வகையில் கல்வி முறைமையில் மாற்றம்! அமைச்சர் சரோஜா

Published

on

Loading

எதிர்கால உலகுக்கு பொருத்தமான வகையில் கல்வி முறைமையில் மாற்றம்! அமைச்சர் சரோஜா

பாடத்திட்டங்களையன்றி எதிர்கால உலகுக்கு பொருத்தமான வகையில் கல்வி முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவதே கல்வி மறுசீரமைப்பின் நோக்கமாகும் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

 இந்த கல்வி மறுசீரமைப்பு என்பது வெறுமனே பாடத்திட்டங்களை நவீனமயப்படுத்துவதோ புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதோ பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதோ மட்டுமின்றி கல்வி முறைமையை முழுமையாக மாற்றுவதே நோக்கமாகும்.

 கல்வி மறுசீரமைப்பானது பாடசாலையில் மாணவர் ஒருவர் கல்வி கற்பதற்கு மேலதிகமாக எதிர்காலத்துக்கு தேவையான உலகளாவிய திறமையை வளர்த்துக் கொள்வது முக்கியமாகும்.

கல்வி மறு சீரமைப்பில் நாம் எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வரும் போது இறுதியானதும் அல்லது கடுமையான தீர்மானத்துடனுமான ஒன்றை சமூகத்தில் திணிப்பது எமது நோக்கம் அல்ல.

Advertisement

2031ல் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை எழுதும் ஒரு மாணவர் 2033 ஆம் ஆண்டில் உயர்தரத்தில் தோற்றி இறுதியில் அவர் ஒரு சமூகப் பிரஜையாகிறார். 

 அந்த வகையில் அடுத்த வருடத்தில் முதலாம் ஆண்டில் சேர்க்கப்படும் ஒரு மாணவர் 2035 ஆம் ஆண்டு தமது முழுமையான கல்வியை நிறைவு செய்து கொண்டு தொழில் உலகிற்குள் பிரவேசிப்பார்.

 அந்த வகையில் நாம் உருவாக்கும் கல்வி மறுசீரமைப்பானது வருடாந்த தேவையை அல்லது இந்த வருடத்தின் தேவையை நிறைவு செய்வதற்கு அப்பால் இன்னும் பத்து வருடங்களுக்கு பின் உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை கருத்திற் கொண்டு சேவை, தொழில் வாய்ப்பு ஆகியவற்றுக்கு பொருத்தமானதாக அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் என்றார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1753390608.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன