இலங்கை
எந்தெந்த நாடுகளுக்கு இலவச விசா? இலங்கை அரசாங்கத்தின் புதிய முடிவு

எந்தெந்த நாடுகளுக்கு இலவச விசா? இலங்கை அரசாங்கத்தின் புதிய முடிவு
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் மேலும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
கடந்த காலத்தில், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விசா கட்டணமின்றி இலங்கைக்கு வருகைதரும் வாய்ப்பு வழங்கப்பட்டன.
இந்தநிலையில், இங்கிலாந்து உள்ளிட்ட மேலும் 40 நாடுகளுக்கு இலவச விசா வசதியை வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, மொத்தம் 47 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா கட்டணமின்றி இலங்கைக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்று விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த நாடுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியம் ,ஜேர்மனி ,நெதர்லாந்து , பெல்ஜியம் , ஸ்பெயின், அவுஸ்திரேலியா, போலாந்து , கசகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ் , ஐக்கிய அமெரிக்கா, கனடா, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஒஸ்ட்ரியா , இஸ்ரவேல், பெலாரஸ், ஈரான், சுவீடன், பின்லாந்து, டென்மார்க், தென் கொரியா, கட்டார் ஓமான், பஹரைன், நியூசிலாந்து, குவைத், நோர்வே, துருக்கி, பாகிஸ்தான்.