பொழுதுபோக்கு
என்ன கதை இருக்குனு இந்த படத்தில் நடிச்சீங்க? மெகா ஹிட் பட வெற்றி விழாவில் விஜயை பார்த்து கேட்ட விக்ரமன்!

என்ன கதை இருக்குனு இந்த படத்தில் நடிச்சீங்க? மெகா ஹிட் பட வெற்றி விழாவில் விஜயை பார்த்து கேட்ட விக்ரமன்!
குஷி திரைப்படத்தில் என்ன கதை இருக்குன்னு நடிக்க ஒப்புக் கொண்டீர்கள் என்று இயக்குநர் விக்ரமன் தன்னை பார்த்து கேட்டதாக, நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார். இந்த த்ரோபேக் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.தமிழ் சினிமாவின் மாஸ் எண்டர்டெய்னர்கள் வரிசையில் நடிகர் விஜய்க்கு முதன்மையான இடம் இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ஃபேமிலி ஆடியன்ஸ் விஜய்க்கு இருக்கின்றனர் என்று கூறினால் மிகை ஆகாது. அந்த அளவிற்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை விஜய் கொண்டுள்ளார்.இதற்கு விஜய்யின் வெற்றிப் படங்கள் தான் காரணம். கமர்ஷியல் மசாலா படத்திற்கு தேவையான அனைத்தும் விஜய்யின் படங்களில் நிறைந்திருக்கும். இதில் குஷி திரைப்படத்திற்கு முக்கிய இடம் இருக்கிறது. அப்போதைய சூழலில், இளைஞர்களை கவரும் வகையில் இந்தப் படம் அமைந்தது. குறிப்பாக, பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனிலும் வசூலை வாரிக் குவித்தது. வாலி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, எஸ்.ஜே. சூர்யா இயக்கிய திரைப்படமாக குஷி அமைந்தது.இப்போதும் கூட குஷி திரைப்படம் பலருக்கு ஃபேவரட்டாக உள்ளது. தற்போது எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் கலக்கிக் கொண்டிருந்தாலும், இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவை பலர் மிஸ் செய்வதாக கூறுவதற்கு இது போன்ற படங்களை உதாரணமாக கூறலாம். ஏனெனில், இளைஞர்களின் பல்ஸ் பார்த்து சரியான படம் கொடுத்த இயக்குநர்களில் எஸ்.ஜே. சூர்யாவும் ஒருவர்.இந்நிலையில், குஷி திரைப்படத்தை பார்த்து விட்டு இயக்குநர் விக்ரமன் தன்னிடம் கேட்ட விஷயத்தை, நடிகர் விஜய் ஒரு விழாவின் போது நினைவு கூர்ந்தார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.அதில், “குஷி திரைப்படம் பார்த்து விட்டு இயக்குநர் விக்ரமன் என்னுடன் பேசினார். இப்படத்தில் கதை என்று என்ன இருக்கிறது? எதற்காக இதில் நடித்தீர்கள்? என்று என்னிடம் கேட்டார். அதற்கு, எஸ்.ஜே. சூர்யா கதை கூறுவதில் கிங். அவர் கதை கூறிய விதத்தில் ஈர்க்கப்பட்டு, குஷி திரைப்படத்தில் நான் நடித்தேன் என்று பதிலளித்தேன்” என நடிகர் விஜய் கூறியுள்ளார்.இதன் மூலம் ஒரு இயக்குநருக்கு கதை சொல்லும் திறமை எந்த அளவிற்கு முக்கியம் என சினிமா ரசிகர்கள் புரிந்து கொள்ள முடிகிறது.