பொழுதுபோக்கு
கமல் ஃபேனா நீ… ஆடியோ லாஞ்ச்ல பாத்துக்கிறேன்; லோகேஷுக்கு ரஜினி வைத்த செக்!

கமல் ஃபேனா நீ… ஆடியோ லாஞ்ச்ல பாத்துக்கிறேன்; லோகேஷுக்கு ரஜினி வைத்த செக்!
ரஜினிகாந்துடன் ஏற்பட்ட ஒரு சுவாரஸ்ய நிகழ்வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கலாட்டா ப்ளஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் பதிவு செய்துள்ளார்.தமிழ் சினிமாவில் இன்றைய சூழலில் மோஸ்ட் வான்டட் இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ் தான். வங்கி ஊழியராக இருந்த லோகேஷ் கனகராஜ் தனது சினிமா ஆர்வம் மூலம் திரைத்துறையில் கால் பதித்தது எல்லோரும் அறிந்த விஷயம். அந்த வகையில், அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட் ஹீரோக்கள் வரை பலர் காத்திருக்கின்றனர்.ஆரம்பத்தில் நண்பர்களுடன் இணைந்து குறும்படங்கள் இயக்கிய லோகேஷ் கனகராஜ், ‘மாநகரம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படமே ஹைப்பர் லிங்க் திரைக்கதை அமைப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் பின்னர், ‘கைதி’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதற்கடுத்து, ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ படங்களை கொண்டு எல்.சி.யூ என்ற சினிமாட்டிக் யூனிவர்சை உருவாக்கிய அவர், சில படங்களை தயாரித்தும் வருகிறார்.இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ திரைப்படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. குறிப்பாக, தமிழ் சினிமாவில் இருந்து ரூ. 1000 கோடி என்ற வசூல் சாதனையை ‘கூலி’ திரைப்படம் நிகழ்த்துமா எனவும் பலர் எதிர்பார்க்கின்றனர்.இந்த சூழலில், கூலி திரைப்படத்தின் புரோமோஷனுக்காக பல நேர்காணல்களை லோகேஷ் கனகராஜ் அளித்து வருகிறார். அதில், தீவிர கமல் ரசிகரான தனக்கும், ரஜினிகாந்திற்கும் இடையே நிகழ்ந்த ஒரு சுவாரஸ்ய தருணத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, “கூலி திரைப்படத்தின் கதை விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, யதார்த்தமாக ஒரு முறை நான் கமல்ஹாசன் ரசிகன் என்று ரஜினிகாந்திடம் கூறினேன். இதற்கு ரஜினிகாந்த் என்னிடம் எதுவும் கூறவில்லை. எப்போதும் போல் ஜாலியாக சிரித்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர், டப்பிங் பணிகள் நிறைவு பெற்ற போது என்னுடைய உதவி இயக்குநர்களிடம், ‘லோகேஷ் என்னிடம் கதை சொல்ல வந்த போது தன்னை கமல் சார் ஃபேன் என்று குறிப்பிட்டு பேசத் தொடங்கினார். அவரை இசை வெளியீட்டு விழாவில் நான் பார்த்துக் கொள்கிறேன்’ எனக் கூறினார்” என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.