சினிமா
கார் விபத்தில் இறந்த தோழி!! குற்ற உணர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்..

கார் விபத்தில் இறந்த தோழி!! குற்ற உணர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்..
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.கடந்த 2021ல் தன் தோழியுடன் பார்ட்டி முடித்து காரில் திரும்பும் போது விபத்துக்குள்ளாகியது.அந்த கார் விபத்தில் தோழி சம்பவ இடத்தில் உயிரிழக்க, யாஷிகா படுகாயங்களுடன் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று குணமானார். தன் தோழி இழப்பை நினைத்து இன்று வரை குற்ற உணர்ச்சியில் இருந்து வருகிறார்.இந்நிலையில் தொழி பவானி இறந்து 4 வருடங்களான நிலையில், அவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஒரு பதிவினை உருக்கமாக பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், 4 வருடங்கள் கடந்துவிட்டன, ஆனால் உன் இழப்பு இன்னும் புதிதாகவே வலிக்கிறது.ஒவ்வொரு நாளும் நீ இங்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் போராடுகிறேன். நேரம் காயங்களை குணப்படுத்தும் என்பார்கள், ஆனால் உன்னை இழந்த வலி கொஞ்சமும் குறையவில்லை, மாறாக அது என் இதயத்தில் நிலையான வலியாக மாறிவிட்டது.நாம் ஒன்றாக இருந்த நினைவுகளில் சிக்கிக்கொண்டு அவற்றை மீண்டும்மீண்டும் நினைத்து இருங்கு நீ இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பாய், என்ன செய்திருப்பாய் என்று கற்பனை செய்து பார்க்கிறேன்.வாழ்க்கை ஒரு கொடூரமான விளையாட்டு போல் உணரவைக்கிறது. உன் இடைவிடாத பேச்சுக்கள், சிரிப்பு, என்னை எப்போதும் சிரிக்க் வைத்த உன் பதில்கள் எல்லாமே இப்போது அதிக தூர கனவு போல் மாறிவிட்டது.நீ இன்னும் இங்கு இருந்திருந்தால், எப்படி இருக்கும் என்பதை நினைத்து நான் உருகுகிறேன். பவ், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு உன்னை நேசிக்கிறேன். என் வருத்தத்தின் பாரம் என்னை நசுக்குகிறது. முடிந்தால் காலத்தை திருப்பி, அந்த விபத்து நடக்காதபடி எல்லாவற்றையும் சரி செய்ய விரும்புகிறேன்.10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற உதவியதில் தொடங்கி, நீ என் வாழ்க்கையை எண்ணற்ற வழிகளில் செழுமையாக்கினாய், நான் வளர்ந்ததை நீ பார்த்தாய், உன் தனித்துவமான பிரகாசத்தை நான் கண்டேன். இந்த நினைவுகளும் உன்னை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற தவீர ஏக்கமும் மட்டுமே என்னிடம் இருக்கிறது.உன் ஆன்மா அமைதி அடைய வேண்டி பிராத்திக்கிறேன், எப்படியாவது வேறு வழியில் நாம் மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையை பிடித்துக்கொண்டிருக்கிறேன். அதுவரை உன் குரல், சிரிப்பு, அந்த அழகிய பூகி போஸ்கள் என்னை துரத்தி,ந் ஆன் இழந்தவற்றை நினைவூட்டுக்கிறது.ஸ்கூபி டூபி டூ, பவ் – உன் இருப்பு இன்னும் என் இதயத்தில் எதிரொலிக்கிறது. அதுவரை உன் நினைவுகளுடன் இங்கு இருக்கிறேன், துக்கத்துடன் குணமடைந்து கொண்டிருக்கிறேன், 3000 மடங்கு உன்னை நேசிக்கிறேன். மறு பிறவியில் சந்திப்போம் என்று உருக்கமாக யாஷிகா பதிவிட்டுள்ளார்.