இலங்கை
கிணற்றில் தவறி வீழ்ந்த யானைகள்: ஒரு யானை பலி: மற்றயது மீட்பு!

கிணற்றில் தவறி வீழ்ந்த யானைகள்: ஒரு யானை பலி: மற்றயது மீட்பு!
வவுனியா வடக்கு கரப்புக்குத்தி பகுதியில் இரண்டு யானைகள் கிணற்றில் வீழ்ந்த நிலையில் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள விவசாய கிணறு ஒன்றில் யானைகள் தவறி வீழ்ந்துள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த கிராமசேவகருக்கு இன்று (25.07.2025) காலை தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கிராமசேவகரால் வனயீவராசிகள் திணைக்களத்திற்கும் காவல்துறையினருக்கும் உடனடியாக தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற வனயீவராசிகள் திணைக்களத்தினர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஒரு யானையினை மீட்டுள்ளனர்.
மற்றய யானை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அதன் சடலம் மீட்கப்பட்டது.
குறித்த இரு யானைகளும் ஒன்றன்பின் ஒன்றாக கிணற்றுக்கள் வீழ்ந்தமையால் ஒரு யானை சேற்றில் புதையுண்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.