இலங்கை
சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் ; பறவைகள் பூங்காவின் உரிமையாளருக்கு தொடரும் விளக்கமறியல்!

சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் ; பறவைகள் பூங்காவின் உரிமையாளருக்கு தொடரும் விளக்கமறியல்!
சொகுசு மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக நாட்டில் இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட அம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (25) உத்தரவிட்டுள்ளது.
அம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட 200 மில்லியன் ரூபாவுக்கு அதிக பெறுமதியான 21 மோட்டார் சைக்கிள்கள் அம்பாந்தோட்டையில் வைத்து ஜூலை 12 ஆம் திகதி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான அம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளர் கொழும்பு – நாராஹென்பிட்டி பிரதேசத்தில் வைத்து ஜூலை 17 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.