விளையாட்டு
சதம் விளாசினார் ஜோ ரூட்..!

சதம் விளாசினார் ஜோ ரூட்..!
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில்.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது, பென் ஸ்டோக்ஸ் (5 வி்க்கெட்) அபாரமாக பந்து வீச இந்தியா 358 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் (58), சாய் சுதர்சன் (61), ரிஷப் பண்ட் (54) ஆகியோர் அரைசதம் அடித்துள்ளார்கள்.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியதுடன் .
அந்த அணியின் தொடக்க வீரர்கள் டக்கட் மற்றும் கிராவ்லி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள்.
இதனால் ரன்ரேட் ஓவருக்கு சராசரியாக 5 என்ற அளவில் வந்து கொண்டிருந்தது. கிராவ்லி 84 ரன்களும், டக்கட் 94 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்துள்ளர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை