Connect with us

விளையாட்டு

சிறுமி பாலியல் வன்கொடுமை புகார்: ஆர்.சி.பி வீரர் மீது வழக்கு

Published

on

RCB player Yash Dayal booked in Jaipur on charges of raping minor Tamil News

Loading

சிறுமி பாலியல் வன்கொடுமை புகார்: ஆர்.சி.பி வீரர் மீது வழக்கு

இந்திய மண்ணில் இந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி நடைபெற்ற 18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பை வென்று அசத்தியது. அந்த அணியினர் முதல் முறை கோப்பையை முத்தமிட்டு மகிழ்ந்தனர். துரதிஷ்டவசமாக, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்து வெளியே நடந்த கடும் நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதமாக உயிரிழந்தார்கள். 56 பேர் காயமடைந்தார்கள். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்இந்நிலையில், கோப்பை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில்  27 வயதான யாஷ் தயாள் ஆடி இருந்தார். இந்த நிலையில், கிரிக்கெட் வீரரும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்.சி.பி) வீரருமான யாஷ் தயாள் மீது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜெய்ப்பூர் போலீசார் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். காஜியாபாத்தில் பெண் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, சில வாரங்களுக்கு முன் அவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. தற்போது யாஷ் தயாள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், காசியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், யாஷ் தயாள் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, உணர்ச்சி ரீதியாகவும், மன மற்றும் உடல் ரீதியாகவும் வன்கொடுமை செய்வதாக குற்றம் சாட்டிய இருக்கிறார். மேலும், துஷ்பிரயோகம் மற்றும் ஏமாற்றுதலை எதிர்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அப்பெண் நீதி கோரி, ஜூன் 21 அன்று முதலமைச்சரின் ஆன்லைன் குறை தீர்க்கும் போர்டல் மூலம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளுடன் ஐந்து ஆண்டுகளாக உறவு கொண்டிருந்ததாகக் கூறியிருந்தார்.இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) ஜூலை 23 அன்று பதியப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமைக்கான தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.”முதல் சம்பவம் (பாலியல் பலாத்காரம்) 2023 இல் நடந்துள்ளது. அப்போது அந்தப் பெண்ணுக்கு 17 வயது. மிகச் சமீபத்திய சம்பவம் ஏப்ரல் 2025 இல் ஜெய்ப்பூரில் நடந்தது. சமீபத்திய பாலியல் பலாத்காரம் இந்தியன் பிரீமியர் லீக்கின் போது நடந்ததாகக் கூறப்படுகிறது.” என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஐ.பி.எல் தொடருக்கான சில போட்டிகள் ஜெய்ப்பூரிலும் நடந்தது குறிபிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன