சினிமா
சூரியால் முடிந்தது…!டாப் ஹீரோக்களால் கூட முடியவில்லை..! புகழ்ந்து தள்ளிய பிரபலம்…!

சூரியால் முடிந்தது…!டாப் ஹீரோக்களால் கூட முடியவில்லை..! புகழ்ந்து தள்ளிய பிரபலம்…!
ஒருகாலத்தில் நகைச்சுவை நடிகர் என அனைவராலும் அழைக்கப்பட்ட சூரி, இன்று “ஹீரோ சூரி” என பெருமையுடன் அழைக்கப்படுகிறார். “காலம் எல்லாவற்றையும் மாற்றும்” என்பார்கள், ஆனால் உண்மையில் அந்தக் காலத்துக்குள் நாம் தாமே நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சூரி தான்.அவரது பயணத்தில் உள்ள சவால்கள், வலி, நிதானமான முயற்சி, அனைத்தையும் எதிர்கொண்டு, தன்னுடைய திறமையை தொடர்ந்து வளர்த்துள்ளார். வெறும் நகைச்சுவைக்குள் சிக்காமல், கதையின் மையமான கதாநாயகனாக மாறியுள்ள சூரி, தற்போது நடித்துவரும் ஒவ்வொரு படமும் வெற்றி பெருகிறது.பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் சமீபத்தில் பேசியபோது, சூரியின் பயணத்தைப் பற்றி மிகுந்த புகழுடன் தெரிவித்தார். “கமல் ஹாசன், அஜித் போன்ற முன்னணி நடிகர்களால் கூட தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுக்க முடியவில்லை. ஆனால் சூரி மட்டும் தனது நடிப்பில் தொடர்ச்சியாக வெற்றி படம் கொடுத்துவருகிறார். அது சாதாரண விஷயம் இல்லை,” என்றார்.”அசால்ட்டாக அந்த வேலைகளை செய்து வருகிறார் சூரி,” என்றும் அவர் கூறினார். சூரியின் வளர்ச்சி சினிமா உலகில் ஒரு புதிய பயணத்தின் கதையாகவும், முயற்சி, பொறுமை மற்றும் கடின உழைப்பின் விளைவாகவும் பார்க்கப்படுகிறது.