சினிமா
தலைவன் தலைவி படம் எப்படி இருக்கு!! டிவிட்டரின் வெளியான விமர்சனம்..

தலைவன் தலைவி படம் எப்படி இருக்கு!! டிவிட்டரின் வெளியான விமர்சனம்..
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் 3 ஆண்டுகளுக்கு பின் இயக்கி இருக்கும் திரைப்படம் தான் தலைவன் தலைவி. நடிகர் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, தீபா சங்கர், ரோஷினி ஹரிப்ரியன், மைனா நந்தினி, காளி வெங்கட், செண்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இப்படம் இன்று ஜூலை 25 ஆம் தேதி ரிலீஸாகியுள்ளது. இப்படத்தினை பார்த்த ரசிகர்கள் சிலர் தலைவன் தலைவி படம் எப்படி இருக்கிறது என்பதை எக்ஸ் தளத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.அதில், படத்தில் காதல் கரடுமுரடு தனமாக இருக்கிறது என்றும் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பு அட்டகாசம் என்றும் வழக்கம் போல் பாண்டிராஜ், குடும்பக்கதையை முழுமையான பொழுதுபோக்கு படமாக எடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளார் ஒரு ரசிகர்.முதல் பாதி பாடல்கள், காமெடி என விறுவிறுப்பாகவும் இண்டர்வல் பிளாக் சூப்பர் என்றும் கூறி வருகிறார்கள்.