பொழுதுபோக்கு
பல ஸ்டைல் பண்ணிருக்கேன்; ஆனா எனக்கு பிடித்த ஸ்டைல் இதுதான்: ரஜினி ஓபன் டாக்!

பல ஸ்டைல் பண்ணிருக்கேன்; ஆனா எனக்கு பிடித்த ஸ்டைல் இதுதான்: ரஜினி ஓபன் டாக்!
ரஜினியின் படங்கள் என்றாலே ஸ்டல்தான் அவருடைய அனைத்து படங்களிலும் அவருடைய ஸ்டைல் இருக்கும். அப்படி இருக்கையில் ஜெயா டிவிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த ஸ்டைல் பற்றி கூறியுள்ளார். விவேக் ரஜினியிடம், “நீங்கள் செய்த ஸ்டைல்களிலேயே ஒவ்வொரு ரசிகருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும் சார், உங்களுக்குப் பிடித்தது எது?” என்று கேட்டபோது, ரஜினிக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது சிகரெட் ஸ்டைல்தான்.சினிமாவில் ஸ்டைல் என்றாலே ரஜினி என்றுதான் முதலில் கூறுவோம். ஏன் என்றால் அவர் படங்களில் எல்லாம் அவருடைய ஸ்டைல் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அப்படி இருக்கையில் ரஜினிகாந்தின் தனித்துவமான ஸ்டைல்களில், ரசிகர்களை அதிகம் கவர்ந்ததும், அவரே விரும்புவதும் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல்தான் என்று அவரே குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, இயக்குனர் கே. பாலசந்தரின் படங்களில், வசனங்களுக்கும் குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கும் இடையே ரஜினி இந்த ஸ்டைலை கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார். சிகரெட்டை வெறும் ஒரு பொருளாக பார்க்காமல், தனது கதாபாத்திரத்தின் உணர்வுகளையும், காட்சியின் வீரியத்தையும் வெளிப்படுத்தும் ஒரு கருவியாக அவர் பயன்படுத்தினார்.”மூன்று முடிச்சு” போன்ற படங்களில் ரஜினி செய்த சில சிகரெட் ஸ்டைல்கள் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளன. மேசையிலிருந்து சிகரெட்டை எடுத்து, அதை அடித்து, மீண்டும் எடுத்துப் போடும் தனித்துவமான ஸ்டைல் பலருக்கும் பிடிக்கும். காற்றில் சிகரெட்டை தூக்கிப் போட்டு வாயால் பிடிப்பது, அதை விரல்களுக்கு இடையில் சுழற்றுவது, புகையை வித்தியாசமான முறையில் வெளியேற்றுவது போன்றவை அவரது தனிப்பட்ட ஸ்டைல்கள்.இது காட்சியில் ஆக்ரோஷத்தையும், கௌரவத்தையும், சில சமயங்களில் நகைச்சுவையையும் வெளிப்படுத்தப் பயன்பட்டது. “மூன்று முடிச்சு” படத்தில் வில்லத்தனத்திற்காகவும், “நினைத்தாலே இனிக்கும்” போன்ற படங்களில் சென்டிமென்ட் காட்சிக்காகவும் இந்த ஸ்டைல் பயன்படுத்தப்பட்டுள்ளது.ரஜினியின் சிகரெட் ஸ்டைல் ஒரு கட்டத்தில் அவரது ரசிகர்களால் மிகவும் பின்பற்றப்பட்டது. காற்றில் சிகரெட்டை தூக்கிப் போட்டு வாயால் பிடிப்பது, விரல்களுக்கு இடையில் சுழற்றுவது, புகையை வித்தியாசமான முறையில் வெளியேற்றுவது போன்ற ஸ்டைல்கள் இளைஞர்களிடையே ஒரு ஃபேஷனாக மாறின. ஆனால் அவை திரைப்படத்தில் கேரக்டரை மாஸ் ஆக காட்டுவதற்காக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் செய்த பல ஸ்டைல் காட்சிகள் மக்கள் மத்தியில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. அதில் முக்கியமாக ரஜினியின் கண்ணாடி ஸ்டைல் என்பது அவரது தனிப்பட்ட அடையாளங்களில் ஒன்று. சண்டைக் காட்சிகளிலோ அல்லது ஒரு மாஸ் காட்சிக்கு முன்போ, கூலிங் கிளாஸை ஒரு சுழற்று சுழற்றி அணிந்துகொள்வது, அதுமட்டுமின்றி ரஜினியின் நடையும், உடல்மொழியும் அவரது ஸ்டைலின் முக்கிய அம்சங்கள் ஆகும்.