இலங்கை
பாடசாலை அதிபர்களுக்கு விசேட கொடுப்பனவு – நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்!

பாடசாலை அதிபர்களுக்கு விசேட கொடுப்பனவு – நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்!
பாடசாலை அதிபர்களுக்கு மேலதிகமான எந்தக் கொடுப்பனவும் வழங்கப்படுவதில்லை என்றும் ஆசிரியர்கள், அதிபர்களை விட அதிக சம்பளம் பெறும் நிலை காணப்படுவதால் அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று (24) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அதேபோன்று, அதிபர்களுக்கு மேலதிகமான எந்தக் கொடுப்பணவும் வழங்கப்படுவதில்லை. ஆசிரியர்கள், அதிபர்களை விட அதிக சம்பளம் பெறும் நிலை காணப்படுகிறது. இதனால் அதிபர் பதவியை பொறுப்பேற்க எவரும் தயார் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
எனவே, அவர்களுக்கான விசேடக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். ஜனாதிபதியும் அவருடைய வரவு செலவுத் திட்ட உரையில் இவ்விடத்தை குறிப்பிட்டிருந்தார். எனினும், இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, இவ்விடயம் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.