இலங்கை
மனிதர்கள் புதைகுழியில்; நீதியும் புதைகுழியிலா… மன்னாரில் பொதுமக்கள் போராட்டம்

மனிதர்கள் புதைகுழியில்; நீதியும் புதைகுழியிலா… மன்னாரில் பொதுமக்கள் போராட்டம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவதானிக்கப்பட்டுள்ள அனைத்து மனிதப்புதைகுழிக்கும் நீதிகோரி, மன்னாரில் நேற்றுப் போராட்டமும் பேரணியும் இடம்பெற்றது.
மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டன. மாந்தை மேற்கு அடம்பன் சந்தியில் நேற்றுக் காலை 10 மணியளவில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது. அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாந்தை மனிதப்புதை குழிவரை பேரணியாகச் சென்றனர்.
‘எங்கே எங்களின் உறவுகள்?’, ‘சர்வதேசமே மௌனம் கலை’, ‘மனிதர்களும் புதைகுழிக்குள், நீதியும் புதைகுழிக்குள்ளா?’ உள்ளிட்ட வாசகங்களை எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.