இலங்கை
மஸ்கெலியா வீதிகளில் மின்குமிழ்கள் இரவு நேரங்களில் ஒளிர்வதில்லை – மக்கள் குற்றச்சாட்டு!

மஸ்கெலியா வீதிகளில் மின்குமிழ்கள் இரவு நேரங்களில் ஒளிர்வதில்லை – மக்கள் குற்றச்சாட்டு!
மஸ்கெலியா நகரில் பல வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள மின்குமிழ்கள் இரவு நேரங்களில் மின் கம்பங்களில் மின் ஒளி மிளிர்வதில்லை என்று மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
மஸ்கெலியா நகரில் உள்ள பிரதான வீதியான ஆலய வீதியிலும் இன்னும் பல வீதிகளில் இரவு நேரங்களில் மின் கம்பங்களில் உள்ள மின் குமிழ்கள் மிளிர்வதில்லை என பாதசாரிகள் மற்றும் பயணிகள், பாடசாலை மாணவர்கள், நகரவாசிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஆலய வீதியில் உள்ள பாரிய குழிகளில் கழிவு நீர் தேங்கி நிற்கும் நிலையில் மின் குமிழ்கள் மிளிராத காரணமாக பாரிய அளவில் சிரமத்தை எதிர் நோக்குவதாக சமன் எலிய மற்றும் சென் ஜோசப் தேசிய பாடசாலை மாணவர்கள், ஆசரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனவே இது தொடர்பில் மஸ்கெலியா பிரதேச சபை முன் வந்து மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ஒளிராத மின் குமிழ்களை சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.