சினிமா
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் கமல்ஹாசன்…!வாழ்த்து தெரிவித்த ஸ்ருதிஹாசன்…!

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் கமல்ஹாசன்…!வாழ்த்து தெரிவித்த ஸ்ருதிஹாசன்…!
பிரபல திரைப்பட நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இன்று (ஜூலை 25) நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினராக பதவியேற்றார். இதுகுறித்து மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.”மக்கள் நீதி மையம் தலைவர் திரு. கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இன்று (ஜூலை 25) இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுள்ளார்.” இந்த முன்னேற்றத்திற்கு அவரின் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இதையடுத்து, அவரது மகள் மற்றும் பிரபல நடிகை ஸ்ருதிஹாசன், இன்ஸ்டாகிராம் மூலம் தந்தைக்கு வாழ்த்து தெரிவித்தார். “நான் எப்போதும் உங்களை நம்புகிறேன், அப்பா. நீங்கள் எங்கு சென்றாலும் சமூக நலனுக்காக உழைக்கிறீர்கள். இப்போது நாடாளுமன்றத்தில் உங்கள் குரல் ஒலிக்கவிருக்கிறது என்பது பெருமையான தருணம்,” என்று ஸ்ருதி குறிப்பிட்டுள்ளார்.