இந்தியா
மாலத்தீவின் ‘நம்பகமான நண்பன்’ இந்தியா: ரூ.4,850 கோடி கடன் உதவி – மோடி அறிவிப்பு

மாலத்தீவின் ‘நம்பகமான நண்பன்’ இந்தியா: ரூ.4,850 கோடி கடன் உதவி – மோடி அறிவிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவும் முன்னிலையில், இந்தியா-மாலத்தீவு இடையே வெள்ளிக்கிழமை முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தச் சந்திப்பு இரு நாடுகளின் உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.பிரதமர் மோடியின் உரை: இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியா மாலத்தீவின் மிக நெருங்கிய அண்டை நாடு. இந்தியாவின் ‘அண்டை நாடுகள் முதலில்’ கொள்கையிலும், ‘சாகர்’ (MAHASAGAR) தொலைநோக்குப் பார்வையிலும் மாலத்தீவு ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. மாலத்தீவின் மிகவும் நம்பகமான நண்பனாக இந்தியா இருப்பதில் பெருமை கொள்கிறது. பேரழிவாக இருந்தாலும் சரி அல்லது பெருந்தொற்றாக இருந்தாலும் சரி, இந்தியா எப்போதும் முதலில் உதவிக்கரம் நீட்டும் நாடாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார். மேலும், “மாலத்தீவுக்கு $565 மில்லியன் (சுமார் ரூ.4,850 கோடி) கடன் உதவி வழங்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம். இந்தியாவு – மாலத்தீவு இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன” என்றும் அவர் தெரிவித்தார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கமாலத்தீவு அதிபர் முகமது முய்சு பேசுகையில், இரு தரப்பிலும் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் 3 முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளன என்றார். இதில் இந்தியாவிலிருந்து $565 மில்லியன் மதிப்புள்ள புதிய கடன் உதவி (சுமார் ரூ. 4,850 கோடி) அடங்கும். தனது அரசின் முன்னுரிமை உள்கட்டமைப்பு மற்றும் சமூக திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.மாலத்தீவுடன் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கி வரும் இந்தியாவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். “மாலத்தீவின் பொருளாதாரத்திற்கு இந்தியாவின் முக்கிய ஆதரவைப் பாராட்டுகிறேன். மாலத்தீவின் சுகாதாரத் துறையில் இந்தியா முக்கிய பங்காளியாகும். இந்தியா, மாலத்தீவு 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. நமது இரு நாடுகளும் வளர்ச்சியுடனும் செழிப்புடனும் திகழ வாழ்த்துகிறேன்” என்று முய்சு கூறினார்.இந்தியா-மாலத்தீவு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (IMFTA) பேச்சுவார்த்தைகளைத் தொடங்குதல். இந்திய அரசு நிதியுதவி அளித்த தற்போதைய கடன் வரம்புகளில் மாலத்தீவின் ஆண்டு கடன் திருப்பிச் செலுத்தும் கடமைகளில் குறைப்பு. ஹுல்ஹுமாலேயில் 3,300 சமூக வீட்டு வசதி அலகுகளை மாலத்தீவிடம் ஒப்படைத்தல். அடு நகரத்தில் சாலைகள் மற்றும் வடிகால் அமைப்பு திட்டத்தைத் தொடக்கி வைத்தல். 6 உயர் தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்குதல். நிறுவன ஆதரவிற்காக மாலத்தீவுக்கு 72 வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குதல் ஆகியன. “இந்த வருகை 2 பொக்கிஷமான நிகழ்வுகளுடன் ஒத்துப்போகிறது” என்று முய்சு கூறினார். இது மாலத்தீவின் சுதந்திர தினம் மற்றும் இந்திய – மாலத்தீவு இராஜதந்திர உறவுகளின் இரட்டை கொண்டாட்டத்தை அவர் குறிப்பிட்டிருந்தார்.