பொழுதுபோக்கு
முதல் முறையாக ஹேர் ஸ்டைல் மாற்றி வந்த விஜயகாந்த்: மறக்க முடியாத ‘அம்மன் கோவில் கிழக்காலே’

முதல் முறையாக ஹேர் ஸ்டைல் மாற்றி வந்த விஜயகாந்த்: மறக்க முடியாத ‘அம்மன் கோவில் கிழக்காலே’
சினிமாவில் அறிமுகமான புதிதில், அதிக தலைமுடியுடன் நடித்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் தனது ஹேர்ஸ்டைலை மாற்றி நடித்திருந்தார், அப்படி அவர் தனது ஹேர்ஸ்டைலை மாற்றி நடித்த முதல் படம் அம்மன் கோயில் கிழக்காலே.தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். கேப்டன் என்று அழைக்கப்பட்ட இவர், படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்ட அவர், தொடர்ந்து அதை தனது படத்தின் படப்பிடிப்பில் கடைபிடித்தவர் விஜயகாந்த். மேலும் புதுமுக இயக்குனர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுத்தவர. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் என்ற விஜயகாந்துக்கு பல அடையாளங்கள் உண்டு.1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜயகாந்த், அடுத்,அகல்விளக்கு, சாமந்திப்பூ, தூரத்து இடிமுழக்கம் என்று ஒருசில படங்களில் நடித்த விஜயகாந்துக்கு பெரிய ஹிட் கொடுத்த படம் என்றால், 1981-ம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை தான். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. விஜயகாந்துக்கு அடுத்தடுத்து ஹீரோவாக பல வாய்ப்புகளும் குவிய தொடங்கியது.சட்டம் ஒரு இருட்டறை படத்தை தொடர்ந்து, சிவப்பு மல்லி, சாட்சி, நூறாவது நாள், நல்ல நாள், வைதேகி காத்திருந்தால் என பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார், இந்த வரிசையில் கடந்த 1986-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான படம் தான் அம்மன் கோயில் கிழக்காலே. வைதேகி காத்திருந்தாள் படத்திற்கு பிறகு, இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 2-வது படமாக வெளியான இந்த படத்தில் விஜயகாந்த், ராதா, ரவிச்சந்திரன், ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இளையராஜா இசையமைப்பில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சின்ன மணி குயிலே, மூனு முடிச்சாலே, கடைவீதி கலகலக்கும் உள்ளிட்ட பாடல்கள், காலம் கடந்து இன்றுவரை நிலைத்திருக்கிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு முன், விஜயகாந்த் நடித்த படங்கள் அனைத்திரும் அதிகமான தலைமுடியுடன் நடித்திருப்பார். தேவைப்பட்டால், விக் வைத்தும் நடித்திருப்பார். குறிப்பாக, 1986-ம் ஆண்டு வெளியான கரிமேடு கருவாயன் படத்தில் கதையின் தேவைக்காக விக் வைத்து நடித்திருந்தார்.அந்த படத்திற்கு பிறகு வெளியான அம்மன் கோயில் கிழக்காலே படத்தில், விஜயகாந்த் தனது ஹேர் ஸ்டைலை முழுவதுமாக மாற்றியிருப்பார். அதுவும் படத்தின் பாதியில் தான் தெரியும். பாதிக்கு முன்பாக எடுத்த காட்சிகள், படத்தின் 2-வது பாதியில் வரும்போது அந்த பழிய ஹேர்ஸ்டைல் வந்துவிட்டு போகும். இந்த படத்திற்கு முன்னதாக சைடு வகிடு எடுத்து வந்த விஜயகாந்த், படத்தில் நேர் வகிடு எடுத்து சீவீயிருப்பார். ஹேர்ஸ்டைலை மாற்றிய விஜயகாந்துக்கு இந்த படம் காலம் கடந்து நிலைத்து நிற்கும் வகையில் பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.