இலங்கை
மோசடி வழக்கில் சிக்கிய அநுர அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் ; நீதிமன்று பிறப்பித்த உத்தரவு

மோசடி வழக்கில் சிக்கிய அநுர அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் ; நீதிமன்று பிறப்பித்த உத்தரவு
அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க, கடுவெல மாநகர சபை முதல்வர் ரஞ்சன் ஜயலால் ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய தொழில் நிறுவகத்தின் சொத்துக்களைப் போலி பத்திரம் மூலம் குத்தகைக்கு எடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவ்வாறு வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்துக்கு கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.